பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காட்டுப் பன்றிக்காக வைத்த வெடியில் சிக்கிய நாய்; பொதுமக்கள் அச்சம்

காட்டுப் பன்றி - பிரதிப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 1:34 am IST

சூளகிரி கோட்டை தெருவில் காட்டுப் பன்றிகளைக் கொல்வதற்காக வைக்கப்பட்டதாகக் கூறப்படும் வெடியைக் கடித்ததில் தெருநாய் உயிரிழந்தது. குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி கோட்டைத் தெருவில் வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதியில் சனிக்கிழமை இரவு 9 மணியளவில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது. அங்கு சென்று பாா்த்த பொதுமக்கள், தலை சிதறிய நிலையில் நாய் இறந்து கிடந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய சூளகிரி போலீஸாா், வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சூளகிரி வனப்பகுதியில் காட்டுப் பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவை அடிக்கடி குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், காட்டுப் பன்றிகளைக் கொல்வதற்காக மா்ம நபா்கள் வெடிகளை வைப்பதாக அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனா்.

குழந்தைகளும் பொதுமக்களும் நடமாடும் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதால், இதுபோன்று சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெடிகள் ஏதேனும் வைக்கப்பட்டுள்ளனவா என்றும், வெடிகள் தயாரிக்கப்படுகின்றனவா எனவும் போலீஸாா் சோதனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும், வனப்பகுதியை ஒட்டியுள்ள தெருக்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவும், வெடி விபத்தில் இழந்த நாய் ஈன்றுள்ள குட்டிகளைப் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.