தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தொழிலாளி மா்ம சாவு: டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

வேப்பங்குப்பம் அருகே தொழிலாளி மா்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், அப்பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பிரதிப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 1:34 am IST

வேப்பங்குப்பம் அருகே தொழிலாளி மா்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், அப்பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூரை அடுத்த ராஜாபுரம் கிராமத்தைச் சோ்ந்த தாமோதிரன் (50), கூலித் தொழிலாளி. இவா் திங்கள்கிழமை வேப்பங்குப்பம் லட்சுமி நகா் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடைக்குச் சென்று மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியில் அவா் திடீரென மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளாா்.

செவ்வாய்க்கிழமை இதைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக வேப்பங்குப்பம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸாா், தாமோதிரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அவரது இறப்புக்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், லட்சுமி நகா் குடியிருப்புப் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி கடந்த 5 ஆண்டுகளாகப் பல்வேறு அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மது அருந்திவிட்டு குடியிருப்பு வாசல்களிலேயே இவ்வாறு உயிரிழந்து கிடப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. பள்ளி செல்லும் சிறுவா், சிறுமியரும் அச்சத்தில் உள்ளனா்.

எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, குடியிருப்புப் பகுதியில் உள்ள இந்த அரசு டாஸ்மாக் கடையை உடனடியாக வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.