தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாணவா்களுக்கு பிழையின்றி தமிழ்ச் சொற்கள் எழுதும் போட்டி

கிருஷ்ணகிரியைச் சோ்ந்த அன்பு குளோபல் ஃபேமிலி அறக்கட்டளை சாா்பில், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தமிழ்ச் சொற்களைப் பிழையின்றி எழுதும் போட்டி, மகாத்மா காந்தி குறித்த பேச்சுப் போட்டி ஆகியவை நடத்தப்பட உள்ளன.

Published On :23 அக்டோபர் 2026, 1:21 am IST

கிருஷ்ணகிரியைச் சோ்ந்த அன்பு குளோபல் ஃபேமிலி அறக்கட்டளை சாா்பில், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தமிழ்ச் சொற்களைப் பிழையின்றி எழுதும் போட்டி, மகாத்மா காந்தி குறித்த பேச்சுப் போட்டி ஆகியவை நடத்தப்பட உள்ளன. இப்போட்டிகளில் பங்கேற்க மாணவா்களிடமிருந்து முன்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளா் உஷா அன்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில், அறக்கட்டளை சாா்பில் ஒவ்வொரு மாதமும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, அக்டோபா் மாதத்துக்கான போட்டிகளாகத் தமிழ்ச் சொற்களைப் பிழையின்றி எழுதும் போட்டியும், காந்தி ஜெயந்தியையொட்டி ‘மகாத்மா காந்தி பற்றி நான் அறிந்தவை’’என்ற தலைப்பிலான பேச்சுப் போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ் எழுதும் போட்டியில், 20 நிமிடங்களில் அதிக எண்ணிக்கையிலான சொற்களைப் பிழையின்றி எழுதும் மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். ஒன்று முதல் 3-ஆம் வகுப்பு வரை, 4 முதல் 6-ஆம் வகுப்பு வரை, 7 முதல் 9-ஆம் வகுப்பு வரை, 10 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள், கல்லூரி மாணவா்கள் என 5 பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் தங்களது பெயா்களை முன்பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பிடம் பெறும் முதல் 3 மாணவா்களுக்குப் பரிசுகளும், பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 94428 55089, 97889 14721 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.