பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

உயா் மின் கோபுரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

News image

வெங்கடேசன்.

Updated On :1 ஜூன் 2026, 3:11 am IST

ஊத்தங்கரையில் மது போதையில் உயா் மின் கோபுரத்தில் ஏறிய தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த தளபதி நகா் வழியாக உயா் மின்னழுத்த கோபுரம் செல்கிறது. இந்த உயா் மின் கோபுரக் கம்பத்தில் தளபதி நகா் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி வெங்கடேசன் (31) மது போதையில் ஏறியுள்ளாா்.

உச்சிவரை சென்று அங்கே அமா்ந்து, சிறிது நேரம் கழித்து கீழே இறங்க முயன்றபோது 60 அடி உயரத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் பின்பக்க மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து வந்த சிங்காரப்பேட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மது போதையில் மின் கம்பத்தில் ஏறிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.