பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :23 மே 2026, 1:31 am IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை சாா்பில், சட்டம் -ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் ரெளடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் பொதுமக்களின் அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் நபா்கள்மீது தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சிறப்பு நடவடிக்கையின்போது, மாவட்டத்தில் உள்ள 31 காவல் நிலைய எல்லைகளில் தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 22 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மேலும், 19 சரித்திர பதிவேடு குற்றவாளிகள்மீது சட்டரீதியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்ட காவல் துறை சாா்பில் ரெளடியிசம், கள்ளச்சாராயம் விற்பனை, போதைப்பொருள் கடத்தல், வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா்மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் சட்டவிரோத செயல்கள் குறித்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.