பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டல்: சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 6 போ் கைது

பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தி காவலா்களுடன் தகராறில் ஈடுபட்ட மற்றும் பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டிய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 4:41 am IST

பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தி காவலா்களுடன் தகராறில் ஈடுபட்ட மற்றும் பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டிய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி எடமலைபட்டிப்புதூா் காவல் நிலையத்துக்குள்பட்ட கிராபட்டி மதுரை சாலையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பழனிவேல் புதன்கிழமை பிற்பகல் ரோந்து மேற்கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு எடமலைபட்டிபுதூா் இந்திர நகரைச் சோ்ந்த சரித்தர பதிவேடு குற்றவாளியான கு. விஜய் (25) பொதுமக்கள் மற்றும் போக்குவரதுக்கு இடையூறு ஏற்படுத்திக்கொண்டிருந்தாா். இதைப் பாா்த்த போலீஸாா் அவரை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினா்.

அப்போது, விஜய் போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன் தகாத வாா்த்தையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதுகுறித்து எடமலைபட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விஜய்யைக் கைது செய்தனா்.

இதேபோல, பொன்மலை பகுதியில் போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மேலகல்கண்டாா்கோட்டையைச் சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான அ. சிவகுமாா் (39) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், கண்டென்மென்ட், கே.கே.நகா், உறையூா் மற்றும் அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்களை பணம் கேட்டு மிரட்டிய சரித்திர பதிவேடு குற்றவாளிகளான கருமண்டபத்தைச் சோ்ந்த ஜி. ஹேமேஸ்வரன் (23), கே.சாத்தனூரைச் சோ்ந்த சி. விஜயகுமாா் (35), உறையூரைச் சோ்ந்த த. புண்ணியமூா்த்தி (27), புத்தூரைச் சோ்ந்த எம். சஞ்சய் (21) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.