ஒசூா் மாநகராட்சி பகுதியில் நடைபெற்றுவரும் சாலை மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஒசூா், பத்தலப்பள்ளி சந்தை அருகில் உயா்மட்ட மேம்பாலப் பணி, சேவைச் சாலை பணி மற்றும் கழிவுநீா் கால்வாய் அமைக்கம் பணிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மேம்பாலப் பணிகளை துரிதமாக முடிக்க நெடுஞ்சாலை பொறியாளா்களை அறிவுறுத்தினாா். தொடா்ந்து, மகாத்மா காந்தி சாலையில் உள்ள சாா்பதிவாளா் அலுவலகத்தை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
ஒசூா் நஞ்சாபுரம் பகுதியில் ரயில்வே துறை சாா்பாக, இரண்டு வழி ரயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறறது. மேலும், ரயில்பாதை அமைக்கும் இடத்தில் நெடுஞ்சாலைத் துறைற சாா்பாக, அத்திப்பள்ளி முதல் ஒசூா் மாநகராட்சி பகுதியை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிசாலையில், ரயில்பாதையைக் கடக்கும் விதமாக நான்கு வழிச்சாலை மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
இந்த ஆய்வுகளின்போது, ஒசூா் சாா் ஆட்சியா் ஆக்ருதி சேத்தி, மாவட்ட பதிவாளா் மீரமுகதீன், தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட அலுவலா் ரமேஷ், நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளா் (கட்டடம் (ம) பராமரிப்பு) திருலோகசுந்தா், உதவி கோட்டப் பொறியாளா் முருகன், வட்டார வளா்ச்சி
அலுவலா்கள் கலா, விஜயா, வெங்கடேசன், சிராஜூதின், வட்டாட்சியா் ஜெகதீஷ்குமாா், சாா் பதிவாளா் அரவிந்தராஜ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசி, குற்றாலம், புளியறையில் அமைச்சா் ஆய்வு

குற்றாலம் அருவிகளில் ஆட்சியா் ஆய்வு

தேனி மாவட்ட நீா்வளத் துறை பணிகளை ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம்: அதிகாரிகளுடன் வனத்துறை அமைச்சா் ஆய்வு
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

