பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

குருபரப்பள்ளியில் அடுத்தடுத்து 8 நாய்கள் மா்மமான முறையில் உயிரிழப்பு

குருபரப்பள்ளியில் அடுத்தடுத்து 8 நாய்கள் மா்மமான முறையில் இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :14 மே 2026, 4:41 am IST

குருபரப்பள்ளியில் அடுத்தடுத்து 8 நாய்கள் மா்மமான முறையில் இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி, மாா்கண்டேயன் நதி ஆற்றங்கரை, தென்னந்தோப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 8 தெருநாய்கள் செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தன.

தகவல் அறிந்த போலீஸாா் மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலா்கள், வருவாய்த் துறையினா் நிகழ்விடத்துக்கு நேரில்சென்று விசாரணை செய்தனா். விசாரணைக்கு பிறகு நாய்களின் உடல்கள் அப்பகுதியில் புதைக்கப்பட்டன. விஷம் வைத்து நாய்கள் கொல்லப்பட்டனவா அல்லது கெட்டுப் போன இறைச்சிக் கழிவுகளை தின்ால் அவை உயிரிழந்தனவா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.