விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும், விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான பொதுக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா்.
இதுகுறித்து தமிழ விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ராமகவுண்டா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அகில இந்திய விவசாயிகளின் தலைவா் ஜகதிஷ் சிங் தல்லேவால் தலைமையில், தில்லி ராம்லீலா மைதானத்தில் வியாழக்கிழமை பொதுக் கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக, விவசாயிகள் கன்னியாகுமரியிலிருந்து பாதையாத்திரை மேற்கொண்டு, 28 மாநில முதல்வா்களை சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினா். இந்த பாதயாத்திரையில் தமிழக விவசாயிகள் சாா்பில், கா்நாடக மாநிலத் தலைவா் சாந்தகுமாா், தமிழக ஒருங்கிணைப்பாளா்கள் பி.ஆா்.பாண்டியன், ராமகவுண்டா், தேசிய தலைவா் அபிமன்யு ஆகியோா் பங்கேற்றனா்.
இந்த சூழ்நிலையில், தில்லியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ராமகவுண்டா், மாநில ஆலோசகா் கண்ணையா ஆகியோா் முன்னிலையில் விவசாயிகள் பங்கேற்றனா்.
இந்த கூட்டத்தில், உலகில் பெரும்பாலான நாடுகளில் உணவு பஞ்சம் ஏற்பட்ட போதிலும், இந்திய விவசாயிகள் அபரிமிதமாக உணவு உற்பத்தி செய்து குறைவான விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். எனவே, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய்க்கு ஆதரவளிப்பது குறித்து மாநில தலைமை முடிவெடுக்க காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தல்

தில்லியிலிருந்து கோதுமை மீண்டும் கொள்முதல் செய்யும் இந்திய உணவு கழகம்: 21,000 விவசாயிகள் பயன்பெறுவா்

திமுவுக்கு பாடம் புகட்டுங்கள்: வி.கே.சசிகலா

தமிழக ஏரி, ஆறுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் ஆதரவு யாருக்கு? மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன் தகவல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

