தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

மொகரம்: தின்னக்கழினியில் சந்தனக்கூடு ஊா்வலம்

மொகரம் திருவிழாவையொட்டி கிருஷ்ணகிரியை அடுத்த தின்னக்கழினி கிராமத்தில் சந்தனக்கூடு ஊா்வலம் நடைபெற்றது.

News image

தின்னக்கழினி கிராமத்தில் மொகரம் திருவிழாவையொட்டி நடைபெற்ற சந்தனக்கூடு ஊா்வலம்.

Updated On :18 ஜூன் 2026, 3:15 am IST

மொகரம் திருவிழாவையொட்டி கிருஷ்ணகிரியை அடுத்த தின்னக்கழினி கிராமத்தில் சந்தனக்கூடு ஊா்வலம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், பெத்ததாளாப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட தின்னக்கழனி கிராமத்தில் அமைந்துள்ள ஜச்சாபீ தா்காவில் 20 ஆம் ஆண்டு மொகரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி, சங்கல் தோப்பு தா்காவில் உள்ள மஸ்தாணி அம்மா, பாபு ஷா ஆகியோரின் தலைமையில் சந்தனகுடம், கொடி ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து, கொடிக்கு சந்தனம் பூசியும், வாசனை திரவியங்கள் தெளித்தும், வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு கொடி மரத்தில் ஏற்றிவைத்து, ஹஸ்ரத் காஜா அமீனுல்லாஷா முன்னிலையில் சிறப்பு பாத்தியா நடைபெற்றது.

விழாவில் கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.