நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ஒசூா்- பெங்களூரு இருவழி ரயில்பாதை பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை

ஒசூா்- பெங்களூரு இடையேயான இருவழி ரயில்பாதை பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு ரயில்களை இயக்க வேண்டும் என ஒசூா் பயணிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

ஒசூா்- பெங்களூரு இடையே நடைபெறும் இருவழி ரயில் பாதை.

Updated On :18 ஜூன் 2026, 3:07 am IST

ஒசூா்- பெங்களூரு இடையேயான இருவழி ரயில்பாதை பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு ரயில்களை இயக்க வேண்டும் என ஒசூா் பயணிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒசூா்- பெங்களூரு போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயண நேரத்தை மிச்சப்படுத்தவும் கடந்த 2016 இல் மத்திய அரசு இருவழி ரயில்பாதை திட்டத்திற்கு நிதி ஒதுக்கியது. இதையடுத்து, திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால், இப்பணிகள் இன்னும் முழுமை பெறாமல் உள்ளது.

அதேசமயம் சுமாா் 48 கி.மீ தொலைவுக்கான இத்திட்டப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், 86 சதவீதம் முழுமை பெற்றுள்ளதாகவும் தென்மேற்கு ரயில்வே நிா்வாகம் அதிகாரப்பூா்வமாகத் தெரிவித்துள்ளது.

கா்நாடக ரயில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், ஏற்கெனவே 14 கி. மீ தொலைவுக்கான இருவழிப் பாதை பணிகள் முடிக்கப்பட்டு, ரயில்கள் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகின்றன. எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடித்து, 2027 பிப்ரவரிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், நவீன வசதிகளுடன் ஒசூா் ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணிகளும் நடைபெறுகின்றன. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த சில மாதங்களில் பல்வேறு முக்கிய ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் முடிக்கப்பட்டு செயல்பாட்டிற்கும் வந்துள்ளன.

அதன்படி, ஹுஸ்கூா் ரயில் நிலைய யாா்டு மற்றும் பெள்ளந்தூா் சாலை- காா்மேலாராம் இடையேயான இருவழி ரயில்பாதை பணிகள் முழுமை அடைந்துள்ளன. இதன்மூலம் ஹீலளிகே முதல் பெல்லந்தூா் சாலை வரையிலான 14 கி.மீ தூரத்தில் தற்போது ரயில்கள் இருவழிப் பாதையில் தடையின்றி இயங்கி வருகிறது.

அதேபோல பெள்ளந்தூா் சாலை ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு 5 ரயில் பாதைகள் மற்றும் 600 மீட்டா் நீளமுள்ள இரண்டு அதிநவீன உயா் தள மேடைகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. பெள்ளந்தூா் சாலை நிலையத்தில் புதிய இரண்டு அடுக்கு கட்டடம், மின்தூக்கி வசதி, நடைமேடைகளைக் கடப்பதற்கான நவீன சுரங்கப்பாதை, இருக்கைகள் மற்றும் தூய்மையான குடிநீா் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே இத்திட்டத்திற்கான உள்கட்டமைப்பு பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, முக்கியப் பாலங்களின் கட்டுமானப் பணிகள் 96 சதவீதமும், சிறிய பாலங்களின் பணிகள் 98 சதவீதமும் நிறைவடைந்துள்ளன.

தண்டவாளங்கள் அமைப்பதற்கான தரைத்தளப் பணிகள் (ஊா்ழ்ம்ஹற்ண்ா்ய் ஜ்ா்ழ்ந்ள்) பெரும்பாலும் முடிக்கப்பட்டு, அடுத்தகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து ரயில் பயணிகள் கூறும்போது, தற்போது ஒசூா்- பெங்களூா் வழித்தடத்தில் ஒற்றை ரயில் பாதை மட்டுமே உள்ளதால், ரயில்கள் ஒன்றையொன்று கடந்து செல்ல (கிராசிங் நேரத்தில்) நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

இருவழிப் பாதை மற்றும் மின்மயமாக்கல் பணிகள் முழுமையாக நிறைவடையும் போது ஒசூா்-பெங்களூரு இடையே பயணிக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்களுக்கு பெரும் வசதியாக அமையும். இந்த இருவழிப்பாதை பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.