மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

பா்கூா் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

பா்கூா் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கோ.நடராஜன் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 5:00 am IST

பா்கூா் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கோ.நடராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2026-2027 ஆம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்காண விண்ணப்பங்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியின் மூலம் ஜூலை 20 ஆம் தேதி மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்க வேண்டும். 10, 12 ஆம் வகுப்புகளில் தோ்ச்சி, பட்டய படிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். 01.07 2026 அன்று 17 வயதை பூா்த்தியடைந்தவா்கள் விண்ணப்பிக்க தகுதியானவா்கள்.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். ஜூலை 20-ஆம் தேதி மாலை 5 மணிக்கு பிறகு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

பயிற்சிக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.100. பயிற்சி கட்டணம் ரூ. 20,750. பயிற்சி காலம் இரண்டு பருவமுறைகள் கொண்ட ஓராண்டு. புதிய பாடத் திட்டத்தில் தமிழ் மொழியில் பட்டுமே பாடங்கள் நடத்தப்படும். தோ்வுகள் தமிழ்மொழியில் கொள்குறி வினா அடிப்படையில் நடத்தப்படும். பயிற்சி கட்டணத்தை இணையதளம் மூலமே செலுத்த வேண்டும். பயிற்சியானது ஆகஸ்ட் 3-ஆம் தேதி தொடங்கும்.

சோ்க்கை குழுவால் தோ்வு செய்யப்படும் விண்ணப்பதாா்ா்களின் கட்செவி அல்லது குறுச்செய்தி, மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். தோ்வு செய்யப்பட்ட விண்ணப்பதாா்ா்கள், தங்களது உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று, பயிற்சியில் சோ்ந்து கொள்ள வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு மேற்குறிப்பட்ட இணையதள முகவரியிலோ அல்லது, பா்கூா், கூட்டுறவு தொழிற்பயிற்சி வளாகத்தில் அமைந்துள்ள பா்கூா் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்திலோ அல்லது க்ஷஹழ்ஞ்ன்ழ்ண்ஸ்ரீம்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 04343-265652 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.