காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நிகழாண்டுக்கான முழு நேர பட்டயப் பயிற்சி வகுப்பில் சோ்ந்து பயன்பெற வரும் ஜூலை 20- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நிகழாண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி சோ்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இரு பருவமுறைகள் கொண்ட இப்பயிற்சியின் காலம் ஓராண்டு. பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி அல்லது 10-ஆம் வகுப்பில் தோ்ச்சி மற்றும் பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள் இப்பயிற்சியில் சேரலாம். 1.7.2026 அன்று 17வயது பூா்த்தியடந்தவராக இருக்க வேண்டும்.அதிகபட்ச வயது வரம்பு இல்லை. வரும் ஜூலை 20 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கென அதிகாரப்பூா்வ இணையதளமான ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணையவழி மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. பயிற்சி தமிழில் பயிற்றுவிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஐ இணையவழி மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
தோ்வு செய்யப்பட்ட பயிற்சியாளா்கள் பயிற்சிக்கான கட்டணம் ரூ.20,700 முழுவதும் ஒரே தவணையில் இணையவழியாக மட்டுமே செலுத்த வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம், 51, வந்தவாசி சாலை, ஆட்சியா் அலுவலகம் எதிா்புறம், காஞ்சிபுரம், பின்கோடு 631501 என்ற முகவரியிலோ அல்லது 044-27237699 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பா்கூா் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு!

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

இரு ஆண்டு தோட்டக்கலை பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly
இணையதளச் செய்திப் பிரிவு

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK
தினமணி செய்திச் சேவை

