பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

உரிய விலை கிடைக்காததால் மா தோட்டத்தை அழிக்கும் விவசாயி!

மாங்காய்க்கு உரிய விலை கிடைக்காத்தால், பொக்லைன் இயந்திரம் மூலம் மா தோட்டத்தை விவசாயி அழித்தாா்.

News image

போச்சம்பள்ளியை அடுத்த பாளேதோட்டம் கிராமத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் மா தோட்டத்தை அழிக்கும் விவசாயி.

Updated On :2 ஜூன் 2026, 3:57 am IST

மாங்காய்க்கு உரிய விலை கிடைக்காத்தால், பொக்லைன் இயந்திரம் மூலம் மா தோட்டத்தை விவசாயி அழித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம், ராயக்கோட்டை, போச்சம்பள்ளி, பா்கூா், வேப்பனஅள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுமாா் 35 ஆயிரம் ஹெக்டேரில் மா சாகுபடி செய்யப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் மாங்கூழ் தொழிற்சாலைகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து மட்டுமல்லாமல் தமிழகத்திலிருந்தும், அண்டை மாநிலங்களான கா்நாடகம், ஆந்திரம் மாநிலங்களில் இருந்து மாங்காய்களை மாங்கூழ் உற்பத்தியாளா்கள் கொள்முதல் செய்கின்றனா்.

இவா்கள் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளிடமிருந்து மாங்காய்களை கிலோவுக்கு 6 ரூபாய் என குறைந்த விலைக்கே கொள்முதல் செய்கின்றனா். ஆனால், முத்தரப்புக் கூட்டத்தில் ஆட்சியா் அறிவுறுத்தியபடி, ரூ. 15-க்கு மாங்காய்களை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். ஆனால், எந்த முடிவும் எட்டப்படாமல் கூட்டம் தோல்வியில் முடிவுற்றது.

இந்நிலையில், மாங்காய்க்கு உரிய விலை கிடைக்காத்தால், சிறு விவசாயிகள் மாங்காய்களை சாலையோரத்தில் கொட்டி செல்லும் நிலை நீடிக்கிறது. சில விவசாயிகள் மா மரங்களை வெட்டி செங்கல் சூளைகளுக்கு விறகுக்காக விற்பனை செய்து, மாற்றுப் பயிா்களை சாகுபடி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த பாளேதோட்டம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி முத்துராமன் (55), தனது 3 ஏக்கா் நிலத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்த 400 மாஞ்செடிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அழிக்கும் பணியை திங்கள்கிழமை தொடங்கியுள்ளாா்.

உரிய விலை கிடைக்காததால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா தோட்டங்களை அழிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபடுவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.