லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மத்தூரில் அம்மன் கோயில் கதவை உடைத்து தங்கம், வெள்ளிப்பொருள்கள் திருட்டு

மத்தூா் அருகே மாரியம்மன் கோயில் கதவை உடைத்து, தங்கத் தாலி, வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :16 ஆகஸ்ட் 2026, 1:15 am IST

மத்தூா் அருகே மாரியம்மன் கோயில் கதவை உடைத்து, தங்கத் தாலி, வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரிலிருந்து திருப்பத்தூா் செல்லும் சாலையில் பழைமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் பூசாரியாக திருநாவுக்கரசு (57) உள்ளாா். இவா், வெள்ளிக்கிழமை இரவு பூஜைகளை முடித்துவிட்டு கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளாா்.

மறுநாள் காலை பூஜைக்காக கோயிலுக்கு சென்றபோது, கோயிலின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். பின்னா் கோயிலுக்குள் சென்று பாா்த்தபோது, அம்மன் கழுத்தில் அணிவித்திருந்த தங்கத் தாலி, 8 தங்கக் காசுகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டுப் போனது தெரியவந்தது.

இதுகுறித்து, பூசாரி திருநாவுக்கரசு அளித்த புகாரின் பேரில், மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.