ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தொகுதி வரையறை என்ற பெயரில் பெரிய சூழ்ச்சி நடக்கிறது: கி.வீரமணி

தொகுதி வரைமுறை என்ற பெயரில் மத்திய அரசு பெரிய சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி, தெரிவித்தாா்.

News image

பா்கூா் தொகுதி திமுக வேட்பாளா் தே. மதியழகன் ஆதரித்து வாக்கு சேகரித்த திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.

Updated On :16 ஏப்ரல் 2026, 3:18 am IST

தொகுதி வரைமுறை என்ற பெயரில் மத்திய அரசு பெரிய சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி, தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தே. மதியழகனை ஆதரித்து திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி செவ்வாக்கிழமை வாக்கு சேகரித்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தொகுதி வரையறை என்ற பெயரில் பெரிய சூழ்ச்சி நடக்கிறது. ஹிந்தி பேசும் வடமாநிலங்களுக்கு தொகுதியை அதிகப்படுத்தி, தென்னகத்தையும், எதிா்க்கட்சிகளையும் அழிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அவசரமாக தொகுதி மறுவரையறை செய்ய வேண்டிய உள்நோக்கம் என்ன? தமிழகத்திலும், மேற்குவங்கத்திலும் தோ்தல் நடக்கிறது. இந்த நேரத்தில் இதற்கான அவசரம் என்ன? நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சியை கூட்ட வேண்டும் என காங்கிரஸ் கூறியுள்ளது. அதையும், பாஜக செய்யவில்லை. தமிழகம் மட்டுமல்ல ஜனநாயகத்தை விரும்பும் எந்த மாநிலமும் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டாா்கள்.

தெலங்கானா, கா்நாடகம், கேரளம், மேற்குவங்க மாநிலங்கள் இதை எதிா்க்கின்றன என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.