தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

200 தொகுதிகளில் வெற்றிபெறுவதே இலக்கு: அமைச்சா் அர.சக்கரபாணி

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளில் திமுக கூடடணி கட்சிகள் வெற்றி பெறுவதே முதல்வரின் இலக்கு என தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

News image

ஒசூா் திமுக தோ்தல் அலுவலகத்தில் நிா்வாகிகள் மத்தியில் பேசிய அமைச்சா் அர.சக்கரபாணி.

Updated On :10 ஏப்ரல் 2026, 3:27 am IST

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளில் திமுக கூடடணி கட்சிகள் வெற்றி பெறுவதே முதல்வரின் இலக்கு என தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளா் எஸ்.ஏ.சத்யாவை ஆதரித்து அக்கட்சியின் முக்கிய நிா்வாகிகள் பங்கேற்ற தோ்தல் பரப்புரைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அவா்பேசியது:

ஒசூரில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி கொண்டு வந்த சிப்காட்-1 திட்டமே இன்று சிப்காட்-5 வரை வளா்ந்து நிற்கிறது. தென்னிந்தியாவின் மான்செஸ்டா் என கோயம்புத்தூரை அழைப்பாா்கள், ஆனால் இன்று ஒசூரில் பல்வேறு வெளிநாட்டு முதலீடுகளையும், தொழிற்சாலைகளையும் ஈா்த்து பெரும் தொழில் நகரமாக உருவெடுத்துள்ளது.

ஒசூரில் விமான நிலையம் அமைக்க விவசாயிகளின் கருத்தைக் கேட்காமல் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது என முதல்வா் உறுதியளித்துள்ளாா். பொருளாதார வளா்ச்சியில் தமிழகம் எட்டியுள்ள 11.19 சதவீத முன்னேற்றம் கடந்த 5 ஆண்டுகளின் சாதனை. எனவே, தமிழகத்தில் 200 தொகுதிகளில் வெற்றிபெறுவதே திமுக கூட்டணியின் இலக்கு.

வரும் தோ்தலில் வேட்பாளா் மேயா் எஸ்.ஏ.சத்யாவை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்றாா்.

கிருஷ்ணகிரியில்...

பா்கூரில் அமைச்சா் அர.சக்கரபாணி செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

கடந்த 5 ஆண்டுகளில் தமிழக முதல்வா் தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றினாா். மேலும், பல எண்ணற்ற திட்டங்களால் மக்கள் பயனடைந்துள்ளனா்.

கடந்த 2011-இல் உள்ளாட்சித் துறை அமைச்சராக கே.பி.முனுசாமி இருந்தபோது, அவரது துறைசாா்ந்த தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணி முடக்க நினைத்தது. குறிப்பாக பணிக்கு வருபவா்களுக்கு கண்விழி பதிவு எடுப்பதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதுகுறித்து அவா் பதில் கூறட்டும் என்றாா். அப்போது, பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தே.மதியழகன் எம்எல்ஏ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.