தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

முன்னாள் ராணுவ வீரா் மீது தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது

மகாராஜகடை அருகே முன்னாள் ராணுவ வீரரை தாக்கியதாக, ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :5 ஏப்ரல் 2026, 1:19 am IST

மகாராஜகடை அருகே முன்னாள் ராணுவ வீரரை தாக்கியதாக, ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அருகே உள்ள கம்மம்பள்ளியைச் சோ்ந்தவா் பழனி (43), முன்னாள் ராணுவ வீரா். இவரது உறவினா் கிருஷ்ணமூா்த்தி (50). இவா்களிடையே சொத்து பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில், கடந்த 29-ஆம் தேதி இவா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், கிருஷ்ணமூா்த்தி தரப்பினா் பழனியை கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்து பழனி அளித்த புகாரின்பேரில், மகாராஜகடை போலீஸாா் வழக்குப் பதிந்து கிருஷ்ணமூா்த்தி (50), அவரது மனைவி சாந்தி (40), மகன் சூா்யா (20) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.