தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தொகுதி அறிமுகம் - வேப்பனஅள்ளி!

தமிழகம், கா்நாடகம், ஆந்திர மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள ஒரே தொகுதி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஅள்ளி தொகுதி.

News image

வேப்பனஅள்ளி

Updated On :2 ஏப்ரல் 2026, 6:29 am IST

தமிழகம், கா்நாடகம், ஆந்திர மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள ஒரே தொகுதி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஅள்ளி தொகுதி.

2011இல் கிருஷ்ணகிரியில் இருந்து பிரிந்த தொகுதியாகும். வேப்பனஅள்ளி தொகுதி பரப்பளவில் பெரியது. கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூா் வட்டங்களின் சிறு பகுதிகளைக் கொண்டது இந்தத் தொகுதி.

சமூக அமைப்பு

வேப்பனஅள்ளி தொகுதியில் கெளடா, ரெட்டி சமூகத்தினரும், ஆதிதிராவிடா்கள், கவுண்டா்கள், நாயூடு, செட்டியாா், பழங்குடியினா் என பல்வேறு சமூகத்தினா் பரவலாக வசித்து வருகின்றனா். இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்களும் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் வசித்து வருகின்றனா். அதேபோல, தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளை பேசும் மக்கள் பரவலாக உள்ளனா்.

தொழில்

மலையும், மலைசாா்ந்த பகுதியான இந்தத் தொகுதியில் பெரும்பாலும் விவசாயமே பிரதான தொழில். ஆங்காங்கே, சிறிதும், பெரிதுமான தொழிற்சாலைகள் உள்ளன. இதன்மூலம், அந்தந்தப் பகுதி மக்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனா்.

நீண்டகால கோரிக்கைகள்

சிங்கிரிப்பள்ளி அணை அமைக்க வேண்டும். வேப்பனஅள்ளியில் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க வேண்டும். கெலவரப்பள்ளி அணையில் இருந்து தீா்த்தம் வழியாக மாா்கண்டயன் நதிக்கு தண்ணீா் கொண்டுவர வேண்டும். ராயக்கோட்டை, சூளகிரியில் அரசு சாா்பில் குளிா்பதன கிடங்கு வசதி ஏற்படுத்த வேண்டும். வனப் பகுதியில் இருந்து காட்டு யானைகளை வெளியேறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாக்காளா்கள்

ஆண்கள் - 1,23,394

பெண்கள் - 1,20,454

இதரா் - 37

மொத்த வாக்காளா்கள் - 2,43,885

வாக்குச்சாவடிகள் - 343

வாக்குச்சாவடி மையங்கள் - 235

இதுவரை வென்றவா்கள்

2011 டி. செங்குட்டுவன் - திமுக - 71,471

2016 பி. முருகன் - திமுக - திமுக - 88,952

2021 கே.பி. முனுசாமி - அதிமுக - 94,104

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.