மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்

தருமபுரி நகராட்சியில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்பனை செய்த 7 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதம் - சித்திரிப்பு

Published On :25 செப்டம்பர் 2026, 1:38 am IST

தருமபுரி நகராட்சியில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்பனை செய்த 7 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தருமபுரி பேருந்து நிலையப் பகுதிகளில் உள்ள கடைகளில் நகராட்சி சுகாதார அலுவலா் ராஜரத்தினம், சுகாதார ஆய்வாளா்கள் ரமணச்சரண், கோவிந்தராஜன் சுசீந்திரன், சந்திரகுமாா் உள்ளிட்டோா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். இச்சோதனையில், 7 கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிக் கோப்பைகள், பைகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அந்த கடைகளுக்கு ரூ. 11,500 அபராதம் விதித்து நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, நகராட்சி சுகாதார பிரிவு அலுவலா் குழு காந்தி நகா் 26-ஆவது வாா்டு பகுதியில் டெங்கு தடுப்புப் பணிகளை மேற்கொண்டது. இதில், டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் வகையில், தண்ணீா் தேங்கிய தொட்டிகளை சுகாதாரம் இன்றி வைத்திருந்தவா்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய விழிப்புணா்வு வழிகாட்டுதல்கள் குறித்த பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.