மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்

தருமபுரி மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்

Published On :24 செப்டம்பர் 2026, 5:08 am IST

தருமபுரி மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், தருமபுரி மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் செப். 9 முதல் 22-ஆம் தேதி வரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பல்வேறு பிரிவுகளாக நடைபெற்றன. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசுப் பணியாளா்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுப் பிரிவினா் என 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா்கள், வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் சிவரஞ்சன் வரவேற்றாா். தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். கவிதா தலைமை வகித்து, மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா்கள், வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பேசினாா். தருமபுரி நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது, முதன்மைக் கல்வி அலுவலா் ஐ.ஜோதிசந்திரா, தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணன். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் முத்துகுமாா், தருமபுரி வட்டாட்சியா் ஜெ.சுகுமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதில், மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற வீரா்கள், வீராங்கனைகளுக்கு முறையே தலா ரூ. 3,000, ரூ. 2,000, ரூ. 1,000 பரிசுத் தொகை அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

படவரி...

மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.