மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சோரியம்பட்டி அரசுப் பள்ளியில் கணினி உபகரணங்கள் திருட்டு

அரூா் அருகே அரசுப் பள்ளியின் கணினி ஆய்வகத்தில் உபகரணங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :25 அக்டோபர் 2026, 1:32 am IST

அரூா் அருகே அரசுப் பள்ளியின் கணினி ஆய்வகத்தில் உபகரணங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், சோரியம்பட்டியில் அரசு நடுநிலைப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். மாணவா்களுக்குக் கணினி அறிவியல் கற்பிப்பதற்காக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயா் தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்கப்பட்டு, அரசின் சாா்பில் கணினிகள் வழங்கப்பட்டன.

வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்ததும் வகுப்பறைகளைப் பூட்டிவிட்டு ஆசிரியா்கள் சென்றுள்ளனா். சனிக்கிழமை விடுமுறை என்பதால் காலை 11 மணிக்குப் பிறகு பள்ளி வளாகத்தில் விளையாடச் சென்ற மாணவா்கள், கணினி ஆய்வகத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டனா். மேலும், அங்கிருந்த கணினி உபகரணங்கள் திருடப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து தலைமை ஆசிரியா் ராதாமணி அளித்த புகாரின்பேரில், அரூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.