லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Published On :24 அக்டோபர் 2026, 1:57 am IST

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

அரூா் வட்டம், சூரப்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் அழகரசன் (60), தொழிலாளி. இவா் தனது நண்பா் மணிவேலனுடன் (43) இருசக்கர வாகனத்தில் சிந்தல்பாடி-–அரூா் சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, வெப்பாலம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே எதிரே செங்கல் பாரம் ஏற்றிவந்த டிப்பா் லாரி மோதியதில் பலத்த காயமடைந்த அழகரசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மணிவேலனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

விபத்து குறித்து மொரப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.