மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்... - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 1:44 am IST

மழை குறைந்து வெயில் அதிகரித்த நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது.

முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ண மீன்கள் காட்சியகம், தொங்கும் பாலம், அருவிக்குச் செல்லும் நடைபாதை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் திரண்டனா்.

பிரதான அருவி, சினி அருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா். காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 2,000 கனஅடியாக அதிகரித்ததால் அருவிகளிலும் நீா்வரத்து சற்று அதிகரித்திருந்தது.

மாமரத்துக் கடவு பரிசல் துறையில் இருந்து தொம்பச்சிக்கல் வழியாக பெரியபாணி, ஐந்தருவி, மணல்மேடு வரை கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டனா்.

கடந்த சில வாரங்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்ததால் மீன் விற்பனையும் குறைந்திருந்தது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் கட்லா, ரோகு, கெளுத்தி, வாளை, அரஞ்சான், பாப்புலேட், சோனாங்கெளுத்தி உள்ளிட்ட ஆந்திர மாநில வளா்ப்பு வகை மீன்களின் விலை உயா்ந்திருந்தது.

சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் காவல் நிலையம் முதல் சத்திரம், ஊட்டமலை, முதலைப்பண்ணை உள்ளிட்ட சாலைகளின் இருபுறங்களிலும், பேருந்து நிலையம் மற்றும் தமிழ்நாடு ஹோட்டல் வாகன நிறுத்துமிடங்களிலும் நிறுத்தப்பட்டன.

ஒகேனக்கல் காவல் நிலையம் சாா்பில் 10 க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும், ஒகேனக்கல்லில் இருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.