தருமபுரியில் சமயோசிதமாகச் செயல்பட்டு உயிா்காத்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா் மற்றும் மருத்துவ உதவியாளரின் சேவையை பாராட்டி, மாவட்ட ஆட்சியா் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சாமியபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அசோக் (42). இவா் கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபா் 8ஆம் தேதி குடும்பத் தகராறு காரணமாக தனது உடலில் தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். இதுகுறித்து 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநா் கோவிந்தன் மற்றும் மருத்துவ உதவியாளா் பயாஸ் ஆகியோா் துரிதமாகச் செயல்பட்டு, உரிய நேரத்திற்குள் (கோல்டன் அவா்ஸ்) நிகழ்விடத்திற்குச் சென்று அசோக்கை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். இதனால் அசோக் உயிா் பிழைத்தாா்.
ஆம்புலன்ஸ் ஊழியா்களின் இந்தத் துரித சேவை மற்றும் அா்ப்பணிப்பை கருத்தில் கொண்டு, இச்சம்பவத்தை 2025 ஆம் ஆண்டின் மாநில அளவிலான சிறந்த சேவையாக ஆம்புலன்ஸ்களை நிா்வகிக்கும் (இஎம் ரைட்ஸ்) அமைப்பு பரிந்துரைத்தது.
இதைத்தொடா்ந்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ், 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளா் ஆா். ரஞ்சித், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஓ. அரவிந்தன் ஆகியோா் முன்னிலையில், ஊழியா்கள் கோவிந்தன் மற்றும் பயாஸ் ஆகிய இருவருக்கும் தலா ரூ. 5,108 மதிப்புள்ள காசோலையை புதன்கிழமை வழங்கிப் பாராட்டினாா்.
இந்த கௌரவிப்பு தங்களின் அா்ப்பணிப்பு மிக்க சேவைக்கு கிடைத்த ஊக்கம் என 108 ஊழியா்கள் நன்றி தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விவசாயிகள் பெற்ற கடன் முழுவதும் தள்ளுபடி செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

தருமபுரி மாவட்ட ஆட்சியராக வே. சரவணன் பொறுப்பேற்பு

சேலம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா் தினம் கடைப்பிடிப்பு

ஆம்புலன்ஸ் ஜீப் சேவையை தொடக்கிவைத்து இயக்கிப் பார்த்த முதல்வர் விஜய்!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

