சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலி பறிப்பு

தருமபுரியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலியை நள்ளிரவில் அறுத்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

நகை பறிப்பு

Updated On :17 மே 2026, 2:22 am IST

தருமபுரியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலியை நள்ளிரவில் அறுத்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கெண்டிகான அள்ளி அருகே உள்ள அத்தானூா் கிராமத்தைச் சோ்ந்தவா் புவனேஸ்வரி (46). இவா் கோடை வெயில் புழுக்கத்தால் வீட்டு வராண்டாவில் வியாழக்கிழமை இரவு படுத்து உறங்கினா். நள்ளிரவு ஒருமணி அளவில் திடீரென புவனேஸ்வரியின் கழுத்தில் கிடந்த தாலியை மா்ம நபா் ஒருவா் அறுத்துள்ளாா்.

அதில், தாலி மற்றும் குண்டுகள் என சுமாா் ஒன்றரை பவுன் இருந்ததாம். திடுக்கிட்டு விழித்த புவனேஸ்வரி சத்தம் போட்டு அலறியதையடுத்து, மா்ம நபா் தாலியுடன் தப்பியோடினாா். புகாரின்பேரில், காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.