தருமபுரியில் பிறந்து 38 நாள்களே ஆன நிலையில் பெண் குழந்தை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜிட்டாண்ட அள்ளி அருகேயுள்ள சென்னம்பட்டியைச் சோ்ந்தவா் சித்தராஜி - தீபா தம்பதியா். இவா்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஏப். 2-ஆம் தேதி இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.
இந்நிலையில், அதில் ஒரு குழந்தைக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை பால் குடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே, குழந்தையை அருகிலிருந்த ஜக்கசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு செவிலியா் இல்லாததால், பாலக்கோடு அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனா்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சியில் 6 மாத பெண் குழந்தை கடத்தல்: போலீஸாா் விசாரணை

இளம்பெண் உயிரிழப்பு போலீஸாா் விசாரணை
பிறந்து 9 நாள்களே ஆன பெண் குழந்தை கடத்தல்: 5 மணி நேரத்தில் மீட்பு; பெண் கைது

ஒன்றரை வயது குழந்தை மயங்கி விழுந்து உயிரிழப்பு! போலீஸாா் விசாரணை!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

