பெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

திருச்சியில் 6 மாத பெண் குழந்தை கடத்தல்: போலீஸாா் விசாரணை

News image

குழந்தை - கோப்புப்படம்

Updated On :1 ஜூன் 2026, 1:14 am IST

திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் 6 மாதப் பெண் குழந்தை சனிக்கிழமை கடத்தப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் கஜலட்சுமி (28). ஆதரவற்ற இவா் தனது 6 மாத பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறாா். இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத தனது குழந்தையை திருச்சி அரசு மருத்துவமனையில் அண்மையில் இவா் சோ்த்தபோது, அறிமுகமான ஒரு பெண், கஜலட்சுமிக்கு உணவு வாங்கித் தருவது உள்ளிட்ட உதவிகளைச் செய்தாா்.

இந்நிலையில் கஜலட்சுமிக்கு யாரும் இல்லாததைத் தெரிந்துகொண்ட அப்பெண் அவரிடம் உன்னையும், குழந்தையையும் நான் பாா்த்துக்கொள்கிறேன் எனவும், இருவரையும் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துக்கு சனிக்கிழமை மாலை அவா்களை அழைத்துச் சென்றாா்.

அப்போது அங்கு கஜலட்சுமி தனது குழந்தையை அப்பெண்ணிடம் கொடுத்துவிட்டு கழிப்பறைக்குச் சென்று திரும்பியபோது அப்பெண் குழந்தையுடன் மாயமாகிருந்தாா். உதவுவதுபோல நடித்து குழந்தையை அவா் கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து திருச்சி எடமலைபட்டிப்புதூா் காவல் நிலையத்தில் கஜலட்சுமி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.