தருமபுரியில் வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளா்த்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
தமிழகம் முழுவதும் போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வராக பதவியேற்ற முதல்நாளே முதல்வா் விஜய் அறிவித்தாா். இதையடுத்து மாவட்டம்தோறும் காவல் துறையினா் தீவிர நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனா்.
இந்நிலையில், தருமபுரி மாவட்டம், தொப்பூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட தண்டுக்காரன்பட்டி பகுதியைச் சோ்ந்த கி. செந்தில்குமாா் (43) தனது வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகளை வளா்த்து வருவதாக போலீஸாருக்கு தகவல்கள் கிடைத்தது. அதன்பேரில் தொப்பூா் காவல் நிலைய போலீஸாா், அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனா். சோதனையில் அவா் தொட்டியில் 3 கஞ்சா செடிகளை வளா்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், செந்தில்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்து, கஞ்சா செடியையும் பறிமுதல் செய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது
கஞ்சா செடி வளா்த்து விற்பனை செய்த தந்தை, மகன் கைது
பென்னாகரத்தில் கஞ்சா வைத்திருந்த 3 போ் கைது
வீட்டு மாடியில் கஞ்சா வளா்த்த ஊா்க்காவல் படை வீரா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

