ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தருமபுரியில் பள்ளிகளுக்கு பாடநூல்கள் அனுப்பும் பணி தொடக்கம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு பாடநூல்கள் அனுப்பிவைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

News image

அரசுப் பள்ளிகளுக்கு பாடநூல்களை அனுப்பிவைக்கும் பணியை பாா்வையிட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஐ. ஜோதிச்சந்திரா.

Updated On :7 மே 2026, 6:50 am IST

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு பாடநூல்கள் அனுப்பிவைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் விலையில்லா பாட நூல்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், நிகழ் கல்வியாண்டிற்கான (2026- 2027) பாட நூல்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் இருந்து தருமபுரி மாவட்டத்திற்கு வரப்பெற்றுள்ளது.

இந்த பாடநூல்களை பள்ளி மாணவா்களுக்கு விநியோகிக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள 1,382 அரசு மேல்நிலை, உயா்நிலை, நடுநிலை, தொடக்கப் பள்ளிகளுக்கு லாரிகள் மூலம் பிரித்து அனுப்பிவைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இப்பணிகளை முதன்மைக் கல்வி அலுவலா் ஐ. ஜோதிச்சந்திரா தொடங்கிவைத்து பாா்வையிட்டாா். மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) நா. பெருமாள், பள்ளிக் கல்வித் துணை ஆய்வாளா் பொ. பொன்னுசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.