கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்

தருமபுரியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஐ.ஜோதிச்சந்திரா.

Updated On :1 மணி நேரம் முன்பு

தருமபுரியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சாா்பில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. தருமபுரி நகராட்சி மகளிா் உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில், மாவட்டத்துக்கு உள்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளைக் கண்டறிந்து, அவா்களை பரிசோதனை செய்து உதவி உபகரணங்கள் வழங்க மருத்துவக் குழுவினரால் பரிந்துரைக்கப்பட்டது.

இதில், உடல் இயக்கக் குறைபாடு உடைய 19 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு முழங்கால், கணுக்கால், பாதம் இணைப்பு உபகரணங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஐ.ஜோதிச்சந்திரா வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுரேஷ், வட்டார ஒருங்கிணைப்பாளா் சிவகுமாா், இயன்முறை மருத்துவா்கள், சிறப்பு பயிற்றுநா்கள், மாற்றுத்திறன் மாணவா்களின் பெற்றோா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.