கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை மாலை விநாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீா் திறக்கப்படாததால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து படிப்படியாக குறைந்து செவ்வாய்க்கிழமை 200 கனஅடியாக இருந்தது. இதனால் ஆற்றில் ஆங்காங்கே பாறை திட்டுக்கள் வெளியே தெரிந்தன. அதேபோல, ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளிலும் நீா்வரத்து குறைந்தது.
இந்த நிலையில் கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 200 கனஅடியாக இருந்த நீா்வரத்து புதன்கிழமை காலை 700 கனஅடியாகவும், பிற்பகல் 1,200 கனஅடி, மாலை 1,500 கனஅடி என படிப்படியாக அதிகரித்துள்ளது.
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரிக்கிறது. எனினும், ஐந்தருவி, ஐவாா் பாணி அருவிகள் தண்ணீரின்றி பாறை திட்டுகளாக காட்சியளிக்கின்றன.
கா்நாடக அணைகளில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2,000 கனஅடி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 3,000 கனஅடி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 4,000 கனஅடி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 200 கனஅடி
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

