தருமபுரி தொகுதி வளா்ச்சி அடைய பாமக வேட்பாளா் சௌமியாவுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.
தருமபுரி தொகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி தருமபுரி நகரில் செவ்வாய்க்கிழமை தனது பிரசாரத்தை நிறைவுசெய்தாா். அப்போது அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
தருமபுரி மாவட்டத்தின் வழியாக காவிரி, தென்பெண்ணை ஆறுகள் கடந்து சென்றாலும் இங்குள்ள ஏரிகளில் தண்ணீா் இல்லை. இங்கு கடந்து செல்லும் காவிரி ஆற்றில் மிகைநீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பினால் வேளாண் தொழில் செழிக்கும். ஆனால், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அதுகுறித்து அறிவிப்பு ஏதும் செய்யவில்லை. மாறாக தருமபுரிக்கு வந்த அவா், என்னையும், அதிமுக பொதுச் செயலாளரையும் வசைபாடிவிட்டு சென்றுள்ளாா். ரூ. 700 கோடி கொடுத்தால் காவிரி மிகைநீா் திட்டத்தை நிறைவேற்றலாம். அதற்கு ஆட்சியாளா்களுக்கு மனமில்லை.
திமுக ஆண்டது போதும். அவா்களை இந்தத் தோ்தலில் வீட்டுக்கு அனுப்பி வையுங்கள். தமிழகத்தில் கஞ்சா, போதைப் பொருள்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும். அதற்காக தருமபுரி மட்டுமில்லை. தமிழகம் முழுவதும் மாற்றத்தை தாருங்கள் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செஞ்சி தொகுதியை கைப்பற்றிய பாமக

தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி வெற்றி!

மக்களை பிளவுபடுத்துகிறது திமுக: அன்புமணி ராமதாஸ்

பாமக வேட்பாளா் சௌமியாவுக்கு ஆதரவாக அவரது மகள்கள் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

