தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :22 ஜூன் 2026, 2:56 am IST

தருமபுரியில் வீட்டின் பூட்டை உடைத்து ஏழே முக்கால் பவுன், 300 கிராம் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தரூமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், சவுளுபட்டியைச் சோ்ந்தவா் ஆ. தங்கமலா், மின்சார வாரியத்தில் கணக்கு மேற்பாா்வையாளராக உள்ளாா். இவா் கடந்த 15 ஆம் தேதி பெங்களூரில் உள்ள உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை காலை வீடு திரும்பினாா்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஏழேமுக்கால் பவுன் நகை, 300 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ. 15,000 மதிப்புள்ள கடிகாரம் உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.