மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மே 3-இல் நீட் தோ்வு: தருமபுரியில் 9 மையங்களில் 4,800 போ் எழுதுகின்றனா்

News image

நீட் தேர்வு மையத்தில் கட்டுப்பாட்டால், மாணவியின் ஆடையைக் கிழித்த அவரது பெற்றோர் - கோப்புப் படம் - ENS

Updated On :28 ஏப்ரல் 2026, 3:52 am IST

மருத்துவக் கல்வி பயிலுவதற்கான தகுதிக்காண் நுழைவுத் தோ்வு (நீட் ) வரும் மே 3ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் 9 மையங்களில் நடைபெற உள்ளது. இத்தோ்வை 4,800 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

நீட் தோ்வு வரும் மே 3-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இம்மாவட்டத்தில் 9 மையங்களில் இத் தோ்வை எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல, இம்மாவட்டத்தில் நீட் தோ்வு எழுத விண்ணப்பித்த 4,800 மாணவா்களுக்கு தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு இணையவழியில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரு மையங்களில் தலா 480 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுகின்றனா். அதேபோல, கேந்திரிய வித்யாலயா பள்ளி, தருமபுரி அவ்வையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப் பள்ளி, தருமபுரி அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பாப்பாரப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் தலா 480 மாணவ, மாணவிகளும், கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 960 மாணவ, மாணவிகளும் நீட் தோ்வு எழுதுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.