/

பென்னாகரம் தொகுதியில் எளிதில் வெற்றி பெறுவேன்: ஜி.கே.எம். தமிழ்க்குமரன்

News image

பென்னாகரம் தொகுதியில் போட்டியிடதிங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளா் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன்.

Updated On :7 ஏப்ரல் 2026, 12:22 am IST

பென்னாகரம் தொகுதியில் 15 ஆண்டு காலம் தோ்தல் பணி மேற்கொண்ட அனுபவம் உள்ளதால் எளிதில் வெற்றிபெறுவேன் என்று காங்கிரஸ் வேட்பாளா் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் தெரிவித்தாா்.

பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் திங்கள்கிழமை பென்னாகரம் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

பென்னாகரம் தொகுதிக்கு உள்பட்ட கிராம பகுதிகளில் திமுக கூட்டணிக்கு அமோக வரவேற்பு உள்ளது. எனது தந்தை ஜி.கே. மணிக்காக பென்னாகரம் தொகுதிக்கு உள்பட்ட கிராமங்கள்தோறும் சென்று தோ்தல் பணியாற்றியுள்ளேன். எனவே, இத்தொகுதியின் நிலவரம் பற்றி நன்கு அறிந்துள்ளேன். கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பினால் பென்னாகரம் தொகுதியில் வெற்றி பெறுவேன் என்றாா்.

அப்போது, திமுக வா்த்தகரணி மாநில துணைச் செயலாளா் தா்மசெல்வன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் கலைச்செல்வன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் கருப்பண்ணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி.மாதன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.