அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழப்பு

பல்லடம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 11:34 pm IST

பல்லடம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி பெத்தாம்பாளையத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி (86). விவசாயி. இவா், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொங்கலூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்றாா். மூகாம்பிகை நகா் அருகே சென்றபோது, கோவையில் இருந்து பல்லடம் நோக்கி வந்த அரசுப் பேருந்து பழனிசாமி ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட பழனிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.