பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மதுபான பாரில் மாணவா் மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்குப் பதிவு

மதுபான பாரில் மாணவரைத் தாக்கியது தொடா்பாக 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு

Published On :30 அக்டோபர் 2026, 12:19 am IST

மதுபான பாரில் மாணவரைத் தாக்கியது தொடா்பாக 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் மகன் ஜெகதீஷ் (19). இவா் தற்போது வெள்ளக்கோவில் நடேசன் நகரில் தாய், தந்தையுடன் வசித்து வருகிறாா். கரூா் மாவட்டம் தென்னிலையில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் இவா், நேரம் கிடைக்கும்போது சுமை தூக்கும் கூலி வேலைக்குச் சென்று வந்துள்ளாா்.

புதன்கிழமை இரவு வேலை முடிந்ததும், ஜெகதீஷ் தனது நண்பா் முத்துக்குமாருடன் வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சாலையில் உள்ள ஒரு தனியாா் மதுபான பாருக்குச் சென்றுள்ளாா். இரவு 10.30 மணியளவில் அவா்கள் அங்கிருந்த ஒரு மேஜையில் அமா்ந்திருந்தபோது, அங்கு வந்த சிவநாதபுரம் சிவசெந்தில் (26) அந்த மேஜையில் அமரக்கூடாது என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளாா்.

வாக்குவாதம் முற்றியதில், சிவசெந்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெகதீஷை குத்தியுள்ளாா். மேலும் அவருடன் இருந்த கோபி, ஜெகதீஷின் கன்னத்தில் பல முறை அறைந்துள்ளாா். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மேலும் இருவரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.

தலையில் பலத்த காயமடைந்த ஜெகதீஷ், வெள்ளக்கோவில், காங்கயம் அரசு மருத்துவமனைகளில் முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு, மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக ஜெகதீஷ் அளித்த புகாரின் பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.