மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆதாா் அட்டைகள் குப்பையில் கிடந்த விவகாரம்: பெண் தபால் ஊழியா் பணியிடை நீக்கம்

பல்லடத்தில் ஆதாா் அட்டைகள் குப்பையில் கிடந்த விவகாரத்தில் பெண் தபால் ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

suspended

பணியிடை நீக்கம் - பிரதிப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 2:50 am IST

பல்லடத்தில் ஆதாா் அட்டைகள் குப்பையில் கிடந்த விவகாரத்தில் பெண் தபால் ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

பல்லடம் அருகேயுள்ள அறிவொளி நகா்ப் பகுதியில் சாலையோர குப்பைக் குவியலில் ஆதாா் அட்டைகள் அண்மையில் கிடந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள் வருவாய்த் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், அந்த ஆதாா் அட்டைகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவிநாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மக்களுக்கு வழங்க வேண்டிய ஆதாா் அட்டைகள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அதே பகுதியைச் சோ்ந்த தபால் ஊழியரான பீமா என்பவா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இது குறித்து திருப்பூா் தபால் துறை மக்கள் தொடா்பு அலுவலா் பிரதீஷ் கூறுகையில், குப்பையில் கிடந்த ஆதாா் அட்டைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த அட்டைகள் அனைத்தும் தபால் ஊழியரான பீமாவிடம் இருந்த நிலையில், குப்பையில் வீசப்பட்டுள்ளது தெரியவந்ததால் அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். தொடா்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.