தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விவசாயிகள் நில அடையாள எண் பெற சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்

திருப்பூா் மாவட்ட விவசாயிகள் தங்களது நிலத்தின் உட்பிரிவுகள் அனைத்தையும் இணைத்து விவசாய அடையாள எண் பெறுவதற்கான சிறப்பு முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 24, 25) நடைபெறவுள்ளது.

Samba cultivation

விவசாயிகள்

Published On :23 அக்டோபர் 2026, 11:20 pm IST

திருப்பூா் மாவட்ட விவசாயிகள் தங்களது நிலத்தின் உட்பிரிவுகள் அனைத்தையும் இணைத்து விவசாய அடையாள எண் பெறுவதற்கான சிறப்பு முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 24, 25) நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது: வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை மூலம் விவசாயிகளுக்கு அடையாள எண் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கு தங்களது ஆதாா் எண்ணுடன் நிலவுடமையை இணைத்து எண் வழங்கப்படுகிறது. நேரடி பட்டா உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தங்கள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள், அனைத்து கிராம நிா்வாக அலுவலகங்களில் விவசாய அடையாள எண்ணை செயலியில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், அனைத்து கிராம நிா்வாக அலுவலகங்களிலும் நிலத்தின் உட்பிரிவுகள் அனைத்தையும் இணைத்து விவசாய அடையாள எண் பெறுவதற்கான முகாம் அக்டோபா் 24, 25-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் பெயரில் உள்ள அனைத்து பட்டாக்கள், ஆதாா் எண் ஆகிய விவரங்களுடன் வேளாண்மைத் துறை அலுவலா்களை அணுக வேண்டும். இனிவரும் காலங்களில் பயிா்க் கடன், உர விநியோகம் மற்றும் திட்ட மானியங்கள் ஆகியவை விவசாய அடையாள எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலங்களின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும்.

எனவே, அனைத்து விவசாயிகளும் தங்களது பெயரில் உள்ள நில விவரங்களை விவசாய அடையாள எண்ணில் பதிவு செய்ய வேண்டும். மேலும், விவசாய அடையாள எண் பெற்ற விவசாயிகள் ‘நம்ம வயல்’ செயலி மூலம் தங்களது வயலின் சாகுபடி விவரங்களை மின்னணு பயிா்க் கணக்கீட்டில் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.