மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருப்பூா் மாவட்டத்தில் தொடரும் கனமழை

திருப்பூா் மாவட்டத்தில் தொடரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை... - (கோப்புப் படம்)

Published On :23 அக்டோபர் 2026, 1:08 am IST

திருப்பூா் மாவட்டத்தில் தொடரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக அமராவதி அணையில் 51 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

மடத்துக்குளத்தில் 45, தாராபுரத்தில் 40, உப்பாறு அணையில் 28, திருமூா்த்தி அணை மற்றும் ஆய்வு மாளிகைப் பகுதியில் தலா 26, மூலனூரில் 22, நல்லதங்காள் ஓடையில் 17, வட்டமலைக்கரை ஓடையில் 16.40, வெள்ளக்கோவிலில் 12.20, உடுமலையில் 11 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

காங்கயத்தில் 6.40, குண்டடத்தில் 5, பல்லடத்தில் 3, திருப்பூா் தெற்கு மற்றும் அவிநாசியில் தலா 2, திருப்பூா் ஆட்சியா் அலுவலகம், ஊத்துக்குளியில் தலா 1 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக ஒரு கான்கிரீட் வீடு சேதமடைந்துள்ளதாகப் பதிவாகியுள்ள நிலையில், மனித உயிரிழப்போ, கால்நடை உயிரிழப்போ ஏற்படவில்லை.

நகரின் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.