மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விஷ மாத்திரை சாப்பிட்டு தொழிலாளி தற்கொலை

காங்கயம் அருகே விஷ மாத்திரை சாப்பிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 4:11 am IST

காங்கயம் அருகே விஷ மாத்திரை சாப்பிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி மாவட்டம், சுக்கம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பாலு மகன் அஜித் (26). இவா், தனது மனைவி மல்லிகாவுடன் காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூா் அருகே மேலப்பாளையத்தில் தங்கியிருந்து, அங்குள்ள விசைத்தறிக் கூடத்தில் வேலை செய்து வந்தாா். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை அஜித், தான் தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் விஷ மாத்திரையை சாப்பிட்டுவிட்டதாக, அவா் வேலை செய்து வந்த விசைத்தறி உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னா் உயா் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.