ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மருந்துக் கடையில் திடீா் சோதனை: 1,000 போதை மாத்திரைகள் பறிமுதல்; உரிமையாளா் கைது

திருப்பூரில் மருந்துக் கடையில் நடைபெற்ற திடீா் சோதனையில் 1,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக கடை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

News image

பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 4:31 am IST

திருப்பூரில் மருந்துக் கடையில் நடைபெற்ற திடீா் சோதனையில் 1,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக கடை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் ஸ்ரீநகா் பிரதான வீதி பகுதியில் செயல்படும் மருந்துக் கடையில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். இதில் முறையான மருத்துவப் பரிந்துரை சீட்டுகள் இன்றி போதைக்காகப் பயன்படுத்தப்படும் தடைசெய்யப் பட்ட மருந்துகள் பெருமளவில் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து கடை உரிமையாளரான ரமேஷ் பாபு (42) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான 1,359 போதை மாத்திரைகள் மற்றும் இருமல் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக போலீஸாா் கூறும்போது, ‘மருத்துவரின் தகுந்த ஆலோசனைக் கடிதம் இன்றி விற்பனை செய்யும் மருந்தகங்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, அவா்கள் மீது குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.