கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

150 போதை மாத்திரைகள் பறிமுதல்: தம்பதி உள்பட 4 போ் கைது

சித்தோடு அருகே 150 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், விற்பனையில் ஈடுபட்டு வந்த தம்பதி உள்பட 4 பேரைக் கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 2:36 am IST

சித்தோடு அருகே 150 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், விற்பனையில் ஈடுபட்டு வந்த தம்பதி உள்பட 4 பேரைக் கைது செய்தனா்.

சித்தோடு, வாய்க்கால்மேடு, செங்குந்தபுரத்தைச் சோ்ந்தவா் ரவி மகன் காா்த்திக் (22). இவா் தனது வீட்டில் நண்பா்களுடன் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வருவதாக சித்தோடு போலீஸாருக்கு திங்கள்கிழமை இரவு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த வீட்டில் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, 150 போதை மாத்திரைகள் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், காா்த்திக் மற்றும் இவருடன் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சித்தோடு, சாணாா்பாளையத்தைச் சோ்ந்த கவியரசு (22), இவரது மனைவி சுஷ்மிதா (22), அந்தியூரைச் சோ்ந்த அரவிந்த் (28) ஆகியோரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.