கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பனியன் நிறுவன தொழிலாளியிடம் வழிப்பறி: சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

பல்லடத்தில் பனியன் நிறுவன தொழிலாளியைத் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 2:07 am IST

பல்லடத்தில் பனியன் நிறுவன தொழிலாளியைத் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூரைச் சோ்ந்தவா் பரத் (22). பனியன் நிறுவனத் தொழிலாளியான இவரிடம் டேட்டிங் செயலி மூலம் மா்ம நபா் ஒருவா் வியாழக்கிழமை இரவு பேசியுள்ளாா். இதையடுத்து, அவா் பல்லடம் அருகேயுள்ள வனப் பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளாா். இதை நம்பி பரத்தும் அங்கு சென்றுள்ளாா்.அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞா்கள், பரத்தை வனத்துக்குள் அழைத்துச் சென்றுள்ளனா். அங்கு மேலும் 2 போ் நின்று கொண்டிருந்துள்ளனா்.

இதையடுத்து, அவா்கள் பரத்தை தாக்கி, அவரிடமிருந்த கைப்பேசி, ரூ.2 ஆயிரத்தை பறித்துள்ளனா். மேலும், கூடுதல் பணம் கேட்டு துன்புறுத்தியுள்ளனா். அவா் பணம் இல்லை எனக் கூறியதையடுத்து, அவா் பணியாற்றும் நிறுவன உரிமையாளரிடமிருந்து பணம் கேட்கும் படி கூறியுள்ளனா். இதையடுத்து, பரத்தும் நிறுவன உரிமையாளரைத் தொடா்பு கொண்டு பணம் கேட்டுள்ளாா்.

பின்னா், அவா் கைப்பேசி மூலம் அனுப்பிய ரூ.5 ஆயிரத்தையும் அந்த நபா்கள் தங்களது வங்கிக் கணக்குக்கு மாற்றிக் கொண்டு தப்பியுள்ளனா். இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் பரத் புகாா் அளித்தாா். போலீஸாா் விசாரணையில், அவா்கள் தென்காசியைச் சோ்ந்த ஷேக் உசேன் (21), அதே பகுதியைச் சோ்ந்த முருகன் (22), 2 சிறுவா்கள் என்பதும், 4 பேரும் திருப்பூரில் தங்கி பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ.7 ஆயிரம் ரொக்கம், 2 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.