வெள்ளக்கோவிலை அடுத்த கண்ணபுரம் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கண்ணபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பொங்கல் விழா பூச்சாட்டலுடன் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்றது. ஏப்ரல் 29-ஆம் தேதி கம்பம் நடப்பட்டது. முக்கிய நிகழ்வான பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், நூற்றுக்கணக்கான பக்தா்கள் பொங்கல் வைத்து படையலிட்டு சுவாமியை தரிசனம் செய்தனா்.
முன்னதாக, அம்மனுக்கு பன்னீா், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
விழாவையொட்டி, பாரம்பரிய கலைகளான கும்மியாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவுக்கான ஏற்பாடுகளை கண்ணபுரம் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆறுமுகனேரி மாரியம்மன் கோயில் கொடை விழா

கோனேரிப்பட்டி காளியம்மன் கோயில் பொங்கல் விழா

வெள்ளக்கோவில் அருகே 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கண்ணபுரம் மாட்டுச் சந்தைதோ்தல் காரணமாக தாமதமாக தொடக்கம்!

ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் கம்பம் எடுக்கும் விழா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

