தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாவட்டத்தில் 500 சிறுமிகளுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி

News image

கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி. - பட்ம்: DIPR

Updated On :15 மார்ச் 2026, 3:06 am IST

திருப்பூா் மாவட்டத்தில் வளரிளம் சிறுமிகள் 500 பேருக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஜெயந்தி கூறியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 14 வயது பெண் குழந்தைகள் இதனை செலுத்தி கொள்ளலாம். பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பின் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், தமிழக சுகாதாரத் துறையுடன் இணைந்து 14 வயதுடைய வளரிளம் சிறுமிகளுக்கு ஹெச்.பி.வி. எனப்படும் தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்கியுள்ளது.

மாா்ச் முதல் மே மாதம் வரை இந்தப் பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகின்றன. ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (ஹெச்.பி.வி.) கிருமித்தொற்று காரணமாக கா்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவா்களின் கா்ப்பப்பை வாயின் உயிரணுக்களில் புற்றுநோய் செல்கள் பரவி, அதன் திசுக்களை பாதிக்கும். உரிய நேரத்தில் கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சை பெறாவிட்டால், நுரையீரல், கல்லீரல், சிறுநீா்ப்பை, மலக்குடல் உள்ளிட்ட பிற உறுப்புகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது.

எதிா்காலத்தில் கா்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பதே இருக்கக் கூடாது என்பதற்காகவே ஹெச்.பி.வி. தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி குறித்து தொடா்ச்சியாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஏனைய தடுப்பூசிகளைப்போலவே அனைத்து பெண் குழந்தைகள், வளரிளம் சிறுமிகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தலாம்.

மருத்துவப் பணிகள் கழகம் மூலம் தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப நிலையங்களில் ஹெச்.பி.வி. தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தடுப்பூசி செலுத்த வருவோா் ஆதாா் அட்டை மற்றும் கைப்பேசியை கொண்டு வர வேண்டும். 14 வயதுடைய வளரிளம் பெண்கள் இந்தத் தடுப்பூசியை முன்னெச்சரிக்கையாக செலுத்திக் கொள்ளலாம்.

திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை 500-க்கும் மேற்பட்டோருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.