உடுமலையில் வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
திருப்பூா் மாவட்டம், உடுமலையைச் சோ்ந்தவா் விக்னேஷ். இவரது மனைவி பிரியதா்ஷினி. இவா்களது மகன் சிவாதித்யா (6). இவா் தனது தாத்தாவுடன் கடந்த சில நாள்களுக்கு முன் காரில் சென்றுள்ளாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த காா் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு கோவையில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவாதித்யா வியாழக்கிழமை மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினா் முன்வந்தனா்.
இதையடுத்து, தமிழ்நாடு உறுப்புதான ஆணைய அனுமதியுடன் சிவாதித்யாவின் 6 உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு ஈரோடு, சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் 6 நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன.
சிவாதித்யாவின் உடலுக்கு உடுமலை வருவாய் கோட்டாட்சியா் குமாா் தலைமையில் அரசு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: 7 போ் பயன்
மூளைச்சாவு அடைந்த ஓட்டுநரின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

