விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காங்கயத்தில் ரூ.2.14 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் ஏலம்போனது.

News image

தேங்காய் பருப்பு விற்பனை

Updated On :10 மார்ச் 2026, 2:05 am IST

காங்கயம்: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் ஏலம்போனது.

காங்கயம்-கரூா் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 1,478 கிலோ தேங்காய் பருப்பை (கொப்பரை) விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

இதில் ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனையானது. அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.145-க்கும், குறைந்தபட்சமாக ரூ.110-க்கும், சராசரியாக ரூ.144-க்கும் ஏலம் போனது. இதற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.