தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

அரசுப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

பொங்கலூா் ஒன்றியம், பொல்லிக்காளிபாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா்கள்.

Updated On :26 ஜூன் 2026, 2:43 am IST

பொங்கலூா் ஒன்றியம், பொல்லிக்காளிபாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு பள்ளி தலைமை ஆசிரியா் குணசேகரன் தலைமை வகித்தாா். இதில் போதைப் பொருள்களின் தீமைகள், அதை ஒழிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பொங்கலூா் வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுந்தரவேல் விளக்கி பேசினாா். இந்நிகழ்வில் போதைப் பொருள் ஒழிப்பு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளா் பரந்தாமன், மாவட்ட புகையிலை தடுப்பு மையத்தின் பொது மருத்துவா் செளமியா, பொங்கலூா் காவல் உதவி ஆய்வாளா் சந்திரன், பொங்கலூா் சுகாதார ஆய்வாளா் கந்தசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா். உதவி தலைமை ஆசிரியா் மதினா பேகம் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.